ஆர்வத்தின் வந்த அருங்கவிகள் அத்துனையும்
ஓர்வலையில் இட்டு உரைத்திட - சீர்வைத்த
சேவடி சேர்ந்தே பணிவோம் சிறக்கவே
தேவே அருள்நீ உவந்து!
(நேரிசை வெண்பா)
முதல் இடுகையை இறைவணக்கத்துடனே துவங்குகின்றேன். எனினும், எந்த ஒரு மதத்தின் இறைவனையும் குறித்துச் சொல்லவில்லை.
இனி இந்த வலை நமக்காக... நீங்கள் மரபுக் கவிதையில் ஆர்வமுள்ளவரெனின் (யாக்கவோ அல்லது படிக்கவோ!) உடனே இவ்வலையில் இணைந்து கொள்ளுங்கள், தங்களின் கவிகளையும் அனுப்பி வையுங்கள்... இந்த வலை தோய்வின்றி பரபரப்பாக இயங்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்...
அன்புள்ள,
விஜய் :-)