பாடலின் தலைப்பு : ”செயலில் காட்டுவம் நன்றியை”
பாடலின் யாப்பு : நேரிசை ஆசிரியப்பா
பாடலாசிரியர் : கா. விஜயநரசிம்மன் (vijay10.n@gmail.com)
பாடல் எழுந்த சூழல் : “எனக்குத் தெரிந்த ஒரு அம்மையார் தன் கல்லூரியில் ஆசிரியதிருநாள் விழா கொண்டாட்டத்தில் படிக்கத் தேவை என்று கேட்டுக்கொண்டதின் பேரில் இயற்றித் தரப்பட்ட பா” - ஆசிரியர்
பாடல் :
தாமரைத் திறக்கும் கதிர்போல் அறிவை
சூழ்திரைத் திறக்கும் துணையே கல்வி
காரிருள் விளக்கும் கைவிளக் கதுபோல்
ஆரிருள் அகற்றும் அருளே கல்வி
உறுநோய் அதனை ஒழிக்கும் மருந்தென 5
அறியா மைநோய் அழிப்பது கல்வி
இத்தகைக் கல்வி எளிய தன்றே
அத்தனைப் பேர்க்கும் அடைந்திட என்றே
மருதம் உழுது மண்ணுயிர்க் கமுதம்
அருளும் நல்லேர் உழவர் போலே 10
நூற்பல உழுது நுவலும் அறிவை
பாற்படா தார்வம் படைத்தவர்க் கருளும்
நல்லா சிரியர் நிலமிசை உள்ளார்
எல்லா புகழ்க்கும் இருப்பிட மாக
பயிரென களையென பகுத்துப் பாரா 15
துயிர்க்கெலாம் ஒருங்கே உதவும் மழைப்போல்
எளியோன் வலியோன் என்றெலாம் எண்ணா
தளியோ டனைவர்க்கும் அருளுவர் அன்னோர்
நமக்கவர் ஈந்த நல்லறி விற்குச்
சமமா குமோநாம் சொல்லும் நன்றியே 20
கரியதன் முன்னர் கடுகென ஆசான்
திருமுன் நாமுரை சொல்லதும் நாணுமே
பலனில் சொற்களை விடுத்துச்
செயலில் காட்டுவம் செய்நன் றியையே! 24
நோக்கமும் நிகழ்வும்
மரபுக் கவிதைகளுக்காக எத்தனையோ வலைப்பதிவுகள் இருக்க, மேலும் ஒரு பதிவு எதற்கு?
எத்தனையோ பதிவுகள் இருப்பதுதான் சிக்கலே... எல்லாரும் எழுதிக்கொண்டே போனால் யார்தான் படிப்பது? யார்தான் கவிதைகளைத் தரம் பார்ப்பது? அதையும் நாம்தான் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டே இந்தப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது!
நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவரா? முதல் வேலையாக இந்தப் பதிவில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்... பிறகு தங்கள் கவிதைகளை
புதுயுகப் புலவர்களை ஒன்று திரட்டி அனைவரும் பிறரின் படைப்புத்திறனை அறிந்து ஆய்ந்து ஆக்கப்பூர்வமாய் முன்னோக்கிச் செல்லவே இந்த வலைப்பதிவு.
தங்களின் மேலான ஆதரவுடன் அது நிறைவேறும் என நம்புகிறேன்...
வணக்கம்! நேரிசை ஆசிரியப்பா இனிமையாக இருந்தது.
பதிலளிநீக்கு"பயிரென களையென பகுத்துப் பாரா"
என்ற அடியில்,"பயிரெனக் களையெனப் பகுத்துப் பாரா"
என்று வலிமிகுந்து வந்திருத்தலாகாதா?
சொல் சரிபார்ப்பை நீக்கி விட்டால் கருத்துரைக்க எளிதாக இருக்கும்.
பதிலளிநீக்கு